ஆந்திரா என்கவுன்ட்டர்: விசாரணையை துவங்கியது தேசிய மனித உரிமை கமிஷன்
ஹைதராபாத்: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பற்றி தேசிய மனித உரிமை கமிஷன் தனது விசாரணையை இன்று துவங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். தொழிலாளர்கள் தங்களை தாக்க வந்ததால் தற்காப்புக்காக அவர்களை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக தொழிலாளர்களின் உடல்களும், செம்மரக் கட்டைகளும் கிடந்த நிலையைப் பார்த்தால் ஆந்திர போலீசார் திட்டமிட்டே அவர்களை கொன்றுள்ளனர் என்று செய்திகள் வெளியாகின. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் தேசிய மனித உரிமை கமிஷன் குழு இன்று தனது விசாரணையை துவங்கியுள்ளது.
தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஹைதராபாத்தில் இன்று முதல் 3 நாட்ளுக்கு விசாரணை நடத்துகிறார்கள். 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு ஏன் உத்தரவிடாமல் இருந்துள்ளனர் என்று தேசிய மனித உரிமை கமிஷன் குழு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வழக்கை கையாண்ட விதம் திருப்திகரமாக இல்லை என்றும் அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications