ஆந்திர கடற்பகுதி அருகில் மீன்பிடிக்க எதிர்ப்பு... 300 தமிழக மீனவர்களை சிறைபிடித்து அட்டூழியம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணாபுரம்: ஆந்திர கடற்பகுதி அருகில் கிருஷ்ணாபுரத்தில் மீன்பிடிக்கச் சென்ற 300 தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநில கடற்கரை அருகில் உள்ளது கிருஷ்ணாபுரம். இந்தப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது வாடிக்கை. வழக்கம் போல் அந்தப் பகுதியில் இன்று மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 300 பேர் இன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

Andhra fishermen oppose Tamils to fishing near Krishnapuram

தமிழக மீனவர்கள் மண்ணூர் மற்றும் கிருஷ்ணாபுரம் அருகில் மீன் பிடிக்கக் கூடாது என்று ஆந்திர மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இதைச் செய்துள்ளனர். 300 தமிழ் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு முன்னர், மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜூன் 16ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 31 பேர் சிறைபிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Andhra Pradesh fishermen have opposed Tamil Nadu fishermen to fishing near Krishnapuram.
Please Wait while comments are loading...