"நடிகை ஸ்ரீரெட்டி மீது பாய்ந்த வழக்கு".. சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண் பற்றிய அவதூறால் சர்ச்சை
அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் உள்ளிட்டவர்கள் பற்றி நடிகை ஸ்ரீரெட்டி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஸ்ரீரெட்டி மீது ஆந்திர போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆந்திராவில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து ஆந்திராவின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். துணை முதல்வராக பவன் கல்யாண் பதவியேற்று செயல்பட்டு வருகிறார். சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் அவரது மகன் நாரா லோகேஷ் இடம்பெற்றுள்ளார். இவர் ஐடி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, தொழில்துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் தான் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள் நாரா லோகேஷ், உள்துறை அமைச்சர் அனிதா ஆகியோர் குறித்து சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகையும், பிரபல யூடியூபருமான ஸ்ரீரெட்டி கூறிய கருத்து விவாதத்தை கிளப்பி உள்ளது. நடிகை ஸ்ரீரெட்டி யூடியூப் சேனல்களுக்கு அவ்வப்போது பேட்டியளிக்கும்போது சொல்லும் கருத்துகள் சர்ச்சையை கிளப்பும்.
அந்த வகையில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், நாரா லோகேஷ், அமைச்சர் அனிதா பற்றி சமூக வலைதளங்களில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நடிகை ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் பிற்படுத்தப்பட்ட பிரிவின் நிர்வாகி ராஜூ யாதவ் சார்பில் கர்னூல் III போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரை தொடர்ந்து நடிகை ஸ்ரீரெட்டி மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகை ஸ்ரீரெட்டி இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு நடிகை விஷால் பற்றி அவர் பேட்டி ஒன்றில் கூறிய கருத்து என்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications