அதிகாலையிலேயே.. தனியார் பஸ் தீப்பிடித்ததில் 10 பயணிகள் பலி.. லாரியுடன் மோதியதால் ஆந்திராவில் சோகம்
அமராவதி: ஆந்திர மாநிலம் மார்கபுரம் மாவட்டத்தில் இன்று காலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள் உடல்கருகி பலியாகி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் மார்கபுரம் மாவட்டம் ராயபுரம் அருகே இன்று காலையில் தனியார் டிராவல்ஸ் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சும், டிப்பர் லாரியும் மோதி கொண்டது. இதில் தனியார் பஸ் உடனடியாக தீப்பிடித்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்தவுடனம் தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 10 பேர் வரை உடல் கருகி பலியாகி உள்ளனர். 25க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் தப்பி உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பஸ் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.
முதற்கட்ட விசாரணையில் தனியார் பஸ் ஹைதராபாத்தில் இருந்து பமுரு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அதேபோல் சிமாகுர்தியில் இருந்து வந்த லாரியும், அந்த பஸ்சும் திடீரென்று நேருக்கு நேர் மோதி உள்ளது. பஸ் உடன் சேர்ந்து லாரியும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த பஸ்சில் மொத்தம் 40 பேர் வரை பயணித்துள்ளனர். இதில் 12 பேர் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications