‛பாஜக இல்லை’.. 151 + 24 ஆந்திரா சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண் தொகுதி பங்கீடு
அமராவதி: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளதோடு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டணியில் பாஜக இல்லை.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் ஆந்திரா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட உள்ளது.

இதனால் ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டசபை தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க ஜெகன் மோகன் ரெட்டி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதேபோல் இழந்த ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு யுக்திகளை வகுத்து வருகிறார்.
அந்த வகையில் வரும் சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவர்கள் 2 பேரும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அந்த வகையில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ளது. அதன்படி இன்று சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது தொகுதி பங்கீடு குறித்த விஷயங்களை அவர்கள் தெரிவித்தனர். ஆந்திராவை பொறுத்தமட்டில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 88 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 151 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மீதமுள்ள 24 தொகுதிகளில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட உள்ளதாக இன்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இரு கட்சிகளும் சேர்ந்து முதற்கட்டமாக 118 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியை பொறுத்தமட்டில் 94 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 23 பேர் புதுமுகங்களாகும். இந்த முதற்கட்ட பட்டியலில் சந்திரபாபு நாயுடுவின் பெயரும் உள்ளது. அவர் மீண்டும் குப்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆந்திராவை பொறுத்தமட்டில் பாஜகவுடன் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் மிகவும் நெருக்கமாக உள்ளனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை அவர்கள் தொடர்ந்து சந்தித்து பேசி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக இன்றி தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications