தெலுங்கானா மசோதாவை நிராகரித்தது ஆந்திர சட்டசபை!!
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான மசோதாவை ஆந்திர மாநில சட்டசபை இன்று நிராகரித்துவிட்டது.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான மசோதாவை ஆந்திர சட்டசபையில் விவாதித்து அனுப்ப வேண்டும் என்று ஜனாதிபதி அனுப்பி வைத்திருந்தார். இதற்கான காலக்கெடு இன்று வரை அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தெலுங்கானா மசோதாவுக்கு ஆந்திர சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் மாநில சட்டசபை நடவடிக்கைகள் முடங்கிப் போயின.
இதைத் தொடர்ந்து தெலுங்கானா மசோதாவை விவாதித்து நிறைவேற்ற மேலும் 3 வாரம் அவகாசம் கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி கடிதம் எழுதி இருந்தார்.
இந் நிலையில் இன்று காலை மாநில சட்டசபை கூட்டம் தொடங்கியதும், தெலுங்கானா மற்றும் சீமாந்திரா எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சட்டசபையை ஒரு மணி நேரத்துக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
பின்னர் சபை கூடிய போது ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைப்பது தொடர்பான மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு முடிவில் தெலுங்கானா மசோதாவை நிராகரிப்பதற்கான வாக்குகள் அதிகம் கிடைத்திருப்பதால் மசோதா நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சட்டசபை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications