ஆந்திராவில் மீண்டும் அண்ணா உணவகம்.. முதல் நாளே அதிரடி காட்டிய சந்திரபாபு நாயுடு! 5 முக்கிய உத்தரவு
விஜயவாடா: ஆந்திர முதல்வராகப் பதவியேற்ற சந்திரபாபு நாயுடு இன்று ஐந்து முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். குறிப்பாக ஏழைகளுக்கு வெறும் ரூ.5இல் உணவு வழங்கும் அண்ணா உணவகங்களை மீண்டும் திறக்கும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்,
ஆந்திர தேர்தலில் தெலுங்கு தேசம் வென்று ஆட்சியைப் பிடித்த நிலையில், சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.

இதையடுத்து இன்று குடும்பத்துடன் திருப்பதி சென்ற சந்திரபாபு நாயுடு, அங்குச் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார். மேலும், ஜெகன் ஆட்சியில் திருப்பதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
5 கோப்புகள்: இதற்கிடையே திருப்பதியில் இருந்து திரும்பியதும் நேராகத் தலைமைச் செயலகம் சென்ற சந்திரபாபு நாயுடு, தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலில் அவர் பதவியேற்பு விழாவிலேயே மூன்று கோப்புகளில் கையெழுத்திடத் திட்டமிடப்பட்டு இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் அத்திட்டம் மாற்றப்பட்டது. அவர் பதவியேற்பு விழாவில் எந்தவொரு கோப்பிலும் கையெழுத்திடவில்லை.
இதற்கிடையே இன்று அவர் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவது கோப்பு ஆந்திராவில் இருக்கும் அரசு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவது தொடர்பானது. இது தொடர்பாகத் தேர்தல் சமயத்திலேயே சந்திரபாபு நாயுடு உறுதியளித்தார். அதை நிறைவேற்றும் விதமாக இன்று முக்கிய கோப்பில் கையெழுத்திட்டார்.
நில உரிமைச் சட்டம்: அடுத்து இரண்டாவது கோப்பு, நில உரிமைச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான கோப்பாகும். முந்தைய ஜெகன் அரசு கொண்டு வந்த இந்த நில உரிமைச் சட்டம் மக்களைப் பாதிப்பதாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, அதை ரத்து செய்வதாக அனைத்து பிரச்சார கூட்டங்களிலும் உறுதியளித்தார். அந்த கோப்பிலும் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டு இருக்கிறார்.
மேலும், ஆந்திராவில் இப்போது முதியோருக்கு மாதாமாதம் ரூ 3000 உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை ரூ.4000ஆக உயர்த்தும் கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார். அதேபோல பொதுமக்களின் திறன்களைக் கண்டறியும் வகையில் "திறன் கணக்கெடுப்பை" நடத்தும் கோப்பிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். பொதுமக்களின் திறனைக் கண்டறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்கலாம் என்பதே இதன் நோக்கமாகும்.
அண்ணா கேன்டீன்: இந்த நான்கு கோப்புகளைத் தவிர சந்திரபாபு நாயுடு மிக முக்கியமான அண்ணா கேன்டீன்களை மீண்டும் திறப்பது தொடர்பான கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 2013இல் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. ஏழைகளுக்குக் குறைந்த விலையில் உணவுகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். அதேபோல ஆந்திராவில் 2016இல் சந்திரபாபு நாயுடு அங்கு அண்ணா உணவகங்களைத் திறந்தார். அங்கே 5 ரூபாய்க்கு உணவுகள் வழங்கப்பட்டன..
அண்ணா கேன்டீன் என்றால் என்ன: தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்டிஆரை அவரது கட்சி தொண்டர்கள் அண்ணா என அழைப்பார்கள். அதை நினைவு கூரும் வகையிலேயே இதற்கு அண்ணா கேன்டீன் என இதற்குப் பெயரிட்டார். 2019இல் ஜெகன் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒய்எஸ்ஆர் அரசு இத்திட்டத்தை மாற்றியமைப்பதாக அறிவித்தது.. இருப்பினும், புதிய திட்டத்தை அவர்கள் செயல்படுத்தவில்லை.. சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே மக்களுக்குப் பயன் அளிக்கும் இத்திட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டி நிறுத்திவிட்டதாகத் தெலுங்கு தேசம் நிர்வாகிகள் சாடினர்.
தேர்தல் சமயத்திலேயே மீண்டும் அண்ணா கேன்டீன்கள் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்திருந்தார். சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தைப் போலவே அண்ணா கேன்டீன்களை மீண்டும் திறக்கும் கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications