ஆந்திராவில் கார் விபத்து... ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப பலி- வீடியோ

ஹைதராபாத்திலிருந்து கார் மூலம் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்துவிட்டு, மீண்டும் ஹைதராபாத் திரும்பும் போது கடப்பாவில் கார் டிராக்டர் மீது மோதி 5 பேர் பலியாகினர்.

Subscribe to Oneindia Tamil

கடப்பா: திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு ஹைதராபாத் திரும்பிய போது, கார் திராக்டரில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகியுள்ள விபத்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருப்பதி ஏழுமையானை தரிசிக்க ஹைதராபாத்திலிருந்து ஒரு குடும்பம் கார் மூலம் திருப்பதி வந்துள்ளது. திருப்பதியில் சுவாமி தரிசனம் முடித்து சந்தோஷத்துடன் வீடு திரும்பும் போது, ஆந்திரா மாநிலம் கடப்பா அருகில் கடகனூர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது கார் வேகமாக மோதியுள்ளது.

 In Andra five of same family members died in accident

அதில் கார் நசுங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, வாடகைக் கார் மோதி துணை நடிகை அனுஷா என்பவர் உயிரிழ்ந்தார். நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களாலும் தற்போது விபத்து அதிகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+