மனைவியை பிரிந்தவர்... குடும்ப உறவுகளை அறியாதவர்... மோடியை தாக்கி பேசிய சந்திரபாபு நாயுடு

அமராவதி:குடும்ப உறவுகளை பற்றி தெரியாதவர்.. மனைவியை பிரிந்தவர் என்று பிரதமர் மோடி மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்த மோடி, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பற்றியும், அவரது அரசை பற்றியும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார். லோகேஷ் என்பவரின் தந்தைதான் சந்திர பாபு நாயுடு என்றும், குடும்ப உறவுகளுக்காக அரசியல் செய்கிறார் என்றும் கூறியிருந்தார்.

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி கொடுத்து உள்ளார். விஜயவாடாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: எனது மனைவி, மகன் என குடும்பத்தாரால் நான் பெருமை அடைகிறேன். ஏனெனில் எனக்கு குடும்பம் இருக்கிறது. உறவுகளின் அருமை தெரியும்.
ஆனால்... பிரதமர் மோடியோ திருமணம் முடிந்து மனைவியை பிரிந்து இருப்பவர். மனைவியை புறந்தள்ளியவர். விவாகரத்து கொடுக்காமலேயே மனைவியை பிரிந்தவர். தமது அரசியல் குருவான அத்வானியை ஒதுக்கிய பிரதமர் மோடி தம்மை பற்றி எதுவும் கூற தேவையில்லை என்று கூறி உள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!