3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர் தயாரிப்பு ஒப்பந்தத்தை பெற அனில் அம்பானி மும்முரம்!!
மும்பை: 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர் தயாரிப்பு ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு ரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி மும்முரம்காட்டி வருகிறார்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமானது பாதுகாப்புத் துறையில் இறங்குவதற்காக ரிலையன்ஸ் டிபென்ஸ் சிஸ்டம்ஸ், ரிலையன்ஸ் டிபென்ஸ் டெக்னாலஜீஸ் மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ், ஏரோஸ்பேஸ் ஆகிய மூன்று துணை நிறுவனங்களை ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் கீழ் உருவாக்கின.

இந்நிறுவனம் அண்மையில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கப்பல் கட்டுமான துறை நிறுவனமான பிப்பாவ் நிறுவனத்தின் 18%பங்குகளை ரூ819 கோடிக்கு கைப்பற்றியிருந்தது.
இதனைத் தொடர்ந்து சர்வதேச பாதுகாப்பு தளவாட தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கடந்த சில வாரங்களாக அனில் அம்பானி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ரிலையன்ஸ் குழுமமும் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றும் இணைந்து ஹெலிகாப்டர் தயாரிப்பில் முழு வீச்சில் இறங்க முடிவு செய்துள்ளது.
இந்திய கடற்படைக்கு தேவையான 100 ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்று இம்மாத இறுதியில் விடப்பட இருக்கிறது. இதில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ், ஹெச்..ஏ.எல் மற்றும் மஹிந்திரா ஏரோ ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களும் கோதாவில் குதித்துள்ளன.
எப்படியும் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றுவதற்காக பெல், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் அனில் அம்பானி இடைவிடாத ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications