லோக்சபா தேர்தலில் மமதாவுக்கு ஆதரவாக பிரசாரம்: அன்னா ஹசாரே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜியை ஆதரிப்பதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

Anna Hazare to campaign for Mamata Banerjee

அன்னாஹசாரே அண்மைக்காலமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தாபானர்ஜிக்கு ஆதரவான கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.

இதனையடுத்து டெல்லி சென்ற மம்தா பானர்ஜி, அன்னா ஹசாரேவை சந்தித்து பேசினார். அன்னாவின் காலை தொட்டு மம்தா ஆசிர்வாதம் வங்கி கொண்டார். இதனை தொடர்ந்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் மம்தா பானர்ஜி மற்றும் அன்னா ஹசாரே இணைந்து செய்தியாளர்களிடம் பேசினர். அன்னா ஹசாரே கூறுகையில், என்னுடையை 17 அம்சங்கள் அடங்கிய கடிதத்தை அனைத்து மாநில முதல் முதல்வர்களுக்கும் அனுப்பினேன். ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை.

டெல்லி மாநில முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலும் பதில் அளிக்கவில்லை. ஆனால் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு பதில் அளித்து கடிதம் எழுதினார்.

மம்தாவின் எளிமை, உறுதியன மனப்பான்மை என்னை கவர்ந்தது. நான் அவரது கொள்கைகளை ஆதரிக்கிறேன். அவரால் தியாகம் செய்யும் குணம் உள்ளது. இது எங்களுடைய பொதுவான பண்பு. லோக்சபா தேர்தலில் மமதாவை ஆதரிப்பேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+