லோக்பால் மசோதா அமையும் வரை உண்ணாவிரதம் தொடரும்: அன்னா ஹசாரே திட்டவட்டம்
ராலேகான் சித்தி: வலுவான லோக்பால் மசோதாவை நிறவேற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதத்தை மீண்டும் தொடங்கி உள்ளார்.
நீண்ட காலமாக வலுவான லோக்பால் மசோதாவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடி வருகிறார் அன்னா ஹசாரே. இதற்காக ஏற்கனவே அவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே வலுவான லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற என்றும் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.
இதற்காக, நேற்று தமது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் தொடங்கியுள்ளார். ஹசாரேவுடன் அவரது ஆதரவாளர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவர் தெரிவித்ததாவது...

வாபஸ் இல்லை....
நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி விடும் என வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார் எனக் கேள்விப் பட்டேன். ஆனாலும், அரசின் இது போன்ற வாக்குறுதிகளை நம்பி நான் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டேன்.

அரசின் வாக்குறுதிகள்...
லோக்பால் மசோதா நிறைவேற்றப் படும் வரை நிச்சயமாக எனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். ஏனேனில், ஏற்கனவே இதேபோன்றதொரு வாக்குறுதி அரசு தரப்பில் அளிக்க்ப் பட்டது. ஆனால், அது நிறைவேற்றப் படவில்லை.

பிரதமர் கடிதம்...
கடந்த முறை ராம்லீலா மைதானத்தில் நான் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த போது பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள். அதில், நிச்சயம் மசோதாவை நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதி அளித்திருந்தார்கள்.

வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை...
நான் அவர்களது வாக்குறுதியை நம்பினேன். அதனால் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் வாக்கிக் கொண்டேன். ஆனால், இது வரை அவர்களது வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை.

நடவடிக்கை இல்லை...
இதுவரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு கிட்டத்தட்ட 15 -16 கடிதங்கள் வந்திருக்கும் இதே வாக்குறுதிகளோடு. ஆனால், அதன் மீது இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

நம்பிக்கையின்மை...
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் 4 மாநில மக்கள் காங்கிரஸ் அரசு மீது தங்களுக்குள்ள நம்பிக்கையின்மையை வெளிக்காட்டி விட்டனர். தொடர்ந்து மத்திய அரசு இதே போக்கைத் தொடர்ந்தால், மக்கள் நிச்சயம் அவர்களுக்கு மற்றுமொரு பாடத்தைப் புகட்டுவார்கள்.

இதற்கு நேரமில்லையா...
சிறைக்குச் சென்ற குற்றவாளிகள் தேர்தலில் பங்கு கொள்ளும் சட்டத்தை அனுமதிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறது. ஆனால், லோக்பால் மசோதாவை அனுமதிக்க நேரமில்லையா..?

சரியான தருணம்...
இதுவே, உங்களுக்கு சரியான தருணம். இதனை நீங்கள் தவறவிட்டால், உங்களுக்கு மீண்டும் இதேபோன்ற வாய்ப்பு அமையாது.

பாதிக்கப் படும் மக்கள்...
லோக்பால் மசோதா நிறைவேற்றப் பட்டால் 80% சதவீத ஊழல் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் பெரும்பான்மையான அரசு அலுவலகக்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்' என அவர் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை....
அதே நேரத்தில், மகாராஷ்டிர அமைச்சர் பாலசாஹிப், அன்னா ஹாசாரேவை சந்தித்து, அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் வாங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications