காசியாபாத்தை அடுத்து அவ்ரங்காபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகராஷ்டிரா மாநிலத்திம் அவ்ரங்கபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் கடந்த 8ம் தேதி தாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதல் நடந்த ஒரு வாரத்திற்குள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவ்ரங்காபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த சிலர் கட்சி அலுவலகத்தை கட்டைகள் கொண்டு தாக்கினர்.

இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது சரத் பவாரின் தேசிவாத காங்கிரஸ் கட்சியினராக இருக்கக்கூடும் என்று உள்ளூர் ஆம் ஆத்மி கட்சியினர் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் அவ்ரங்காபாத் மாவட்ட செயலாளர் ஹர்மீத் சிங் கூறுகையில்,

4 முதல் 5 பேர் மதியம் 12.30 மணிக்கு எங்கள் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து ஜன்னல், எல்சிடி டிவி, மேஜைகள் மற்றும் அங்கிருந்த பொருட்களை கட்டையால் அடித்து உடைத்தனர். முன்னதாக கட்டிடத்தின் உரிமையாளர் எங்களுக்கு போன் செய்து ஆம் ஆத்மி கட்சி பேனரை நீக்குமாறும், இல்லை என்றால் அலுவலகம் தாக்கப்படலாம் என்றும் எச்சரித்தார். நாங்களும் பேனரை அகற்ற சம்மதித்தோம். ஆனால் அதற்குள் தாக்கிவிட்டனர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+