பெங்களூரை் தொடர்ந்து... கர்நாடகாவின் தும்கூரில் பரபரப்பு... பட்டப்பகலில் வீட்டில் புகுந்த சிறுத்தை!
தும்கூர்: கர்நாடகாவில் மீண்டும் ஒரு சிறுத்தை பட்டப் பகலிலேயே பங்களா வீடு ஒன்றில் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பினையும், பீதியினையும் ஏற்படுத்தியுள்ளது.
தும்கூர் தாலுகா அனுமந்தபுராவில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோவில் பின்பகுதியில் வசிக்கும் கங்கண்ணா என்பவரின் வீட்டில் நேற்று காலை சிறுத்தை ஒன்று நுழைந்தது.
ஆனால், கங்கண்ணா மற்றும் உறவினர்கள் அனைவரும் வயல்வெளிக்கு சென்றிருந்ததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறுத்தை வீட்டுக்குள் நுழைந்ததை அறிந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர்.

இதனால், வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை பீதி அடைந்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், போலீசார் கூடியிருந்த பொதுமக்களை விரட்டினர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், வனத்துறையினர் மயக்க மருந்து அடங்கிய ஊசியால் சுட்டு சிறுத்தையை மயக்கமடையச் செய்து பிடித்து சென்றனர். மக்கள் வசிக்கும் பகுதி என்பதாலும், அந்த வீட்டின் புல்வெளிப் பகுதியிலேயே சிறுத்தை சுற்றியதாலும் அதைப் பிடிப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications