‛இந்தியா’கூட்டணிக்கு அடுத்த அடி..புள்ளிவைத்த பரூக் அப்துல்லா..காங்கிரஸை கழற்றிவிடும் மெகபூபா முப்தி?

Subscribe to Oneindia Tamil

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ‛இந்தியா' கூட்டணியில் இருந்த பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேபோல் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட முடிவு செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. தற்போது அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற பெயரில் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 6 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் 5 நாடாளுமன்ற தொகுதிகளிலும், லடாக்கில் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் உள்ளன.

Another setback for INDIA alliance: After Farooq Abdullah party Mehbooba Mufti trying to contest without Congress in jammu kashmir

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது பாரமுல்லா, ஸ்ரீநகர், அனந்த்நாக் உள்ளிட்ட தொகுதிகளில் பரூக் அப்துல்லாவின் தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மாறாக லடாக், உதாம்பூர், ஜம்மு ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி மற்றும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிகள் எந்த தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலுக்கு பிறகு தான் ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. ஜம்மு காஷ்மீரை பொறுத்தமட்டில் ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு பரூக் அப்துல்லா, ‛‛லோக்சபா தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறக் கூடும். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்தே போட்டியிடும். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. காங்கிரஸ் கட்சி உடனான தொகுதி பங்கீடு தோல்வியடைந்தது. இதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம். '' என்றார்.

அதோடு பாஜக கூட்டணியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு வாஜ்பாய் காலத்திலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி இடம் பெற்றிருந்தது எனக்கூறினார். அவரது இந்த பதில் என்பது பரூக் அப்துல்லா கட்சி பாஜக கூட்டணியில் இணைகிறதா? என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. பரூக் அப்துல்லாவின் இந்த முடிவு என்பது ‛இந்தியா' கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு அடுத்ததாக தற்போது காங்கிரஸ் கட்சியை மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி கழற்றிவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை விரைவில் கட்சியின் நாடாளுமன்ற குழு கூடி விரைவில் முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரசுடன் அந்த கட்சி அங்கம் வகிக்கிறது. இத்தகைய சூழலில் தான் 6 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கைள கட்சியின் நாடாளுமன்ற குழு முடிவெடுக்கும் என கூறியிருப்பது காங்கிரஸை கழற்றிவிடுவதற்கான சிக்னல் என அரசியல் நோக்கர்கள் தெரிவத்துள்ளனர்.

இதேபோன்று தான் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்து காங்கிரஸை கழற்றிவிட்டுள்ளது. இதனால் மெகபூபாவின் கட்சியும் காங்கிரஸை கழற்றிவிடுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி மக்கள் ஜனநாயக கட்சியின் சுஹைல் புகாரி கூறுகையில், ‛‛தேசிய மாநாட்டு கட்சி தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளது. இதனால் நாங்கள் அதுபற்றியும், அரசியல் சூழல் குறித்தும் விவாதித்து எதிர்காலத்துக்கு தேவையான முடிவை எடுப்போம்'' என்றார்.

இதற்கிடையே தான் ‛இந்தியா' கூட்டணியை விட்டு வெளியேறி மெகபூபா முப்தியின் கட்சி விட்டுவிட்டு 6 தொகுதிளிலும் தனித்து களமிறங்குகிறது என்ற செய்தி வேகமாக பரவியது. இதையடுத்து அந்த கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛மக்கள் ஜனநாயக கட்சி ‛இந்தியா' கூட்டணியுடனான உறவை முறித்துக்கொள்வது பற்றி வெளியான தகவல் என்பது இட்டுக்கட்டப்பட்ட கதையாகும். இந்த செய்திகளை புறக்கணிக்க வேண்டும். நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம். இந்த தகவலை நம்ப வேண்டாம்'' என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் கூட மெகபூபா முப்தி, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் ஆம்ஆத்மி முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் ஸ்டைலில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிடலாம் என கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி, பகவந்த் ஆகியோர் முறையே மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இன்றி தனித்து வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. இருப்பினும் ‛இந்தியா' கூட்டணியில் தொடர்கின்றன. அந்த வகையில் ‛‛இந்தியா'' கூட்டணியில் ருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சியை விட்டு தனித்து மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி களம் காணலாம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+