CNN News 18 Exit Polls: நெக் டூ நெக் ஃபைட்! காங்கிரஸுக்கே வின்னிங் சான்ஸ் அதிகம்! தகர்ந்த பாஜக கனவு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே நெக் டூ நெக் ஃபைட் இருக்கும் என சிஎன்என் நியூஸ் 1 எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.
சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக நவம்பர் 7, நவம்பர் 17 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியை பிடித்தது. அந்த வகையில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க பாஜகவும் போராடி வருகிறது.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் சத்தீஸ்கரில் தேர்ல் நடைபெற்று வருகிறது. முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த ஆட்சி 2003 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து நடந்த தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. 2008, 2013 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ந்து பாஜக ஆட்சியை பிடித்தது.
சுமார் 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தது. இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. பாஜகவை போல் இந்த ஆண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி போராடுகிறது. ஆனால் கடந்த முறை விட்டதை இந்த முறை பிடிக்க வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால் இதை வாக்காளர்கள் தானே முடிவு செய்ய வேண்டும். அவர்கள் எழுதும் தீர்ப்பு என்னவென டிசம்பர் 3 இல் தெரியவரும். அதற்கு முன்பாக தேர்தல் முடிந்தவுடன் மக்களிடையே நடத்திய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி சிஎன்என் நியூஸ் 18 நிறுவனம் நடத்தி கருத்துக் கணிப்புகளின்படி காங்கிரஸ் கட்சி 47 இடங்களில் பாஜக 40 இடங்களிலும் மற்றவை 3 இடத்திலும் வெல்லும்.
இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 45 அல்லது 46 இடங்கள் தேவைப்படும். ஆனால் காங்கிரஸ் கட்சி 47 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளதால் இந்த முறை காங்கிரஸ் கட்சியே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications