வெடிகுண்டா வெச்சிருக்கேன்னு கேட்ட பயணி.. அலேக்காக அரெஸ்ட் செய்த போலீஸ்.. கொச்சி ஏர்போர்ட் பரிதாபம்!
கொச்சி: கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் தம்மிடம் வெடிகுண்டு இருக்கிறதா? என சோதனை நடத்துகிறீர்களா? என அலுத்துக் கொண்ட பயணியை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறி போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலகப் பாதுகாப்பு அதிகாரியின் புகாரின் பேரில் வெடிகுண்டு இருக்கிறதா? என கேட்ட பயணி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொச்சியில் இருந்து மும்பை செல்வதற்காக கொச்சி விமான நிலையம் சென்றார் பயணி மனோஜ். அவரது உடைமைகளை தொழிலகப் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.

அப்போது, அசால்ட்டாக, என் பையில் வெடிகுண்டு இருக்கிறதா? என்பதற்காக இப்படி சோதனை நடத்துகிறீர்கள்? என தொழிலகப் பாதுகாப்பு படை வீரரிடம் கேட்டிருக்கிறார் பயணி மனோஜ். உடனே, 'வெடிகுண்டு' பற்றி இவர் ஏதோ சொல்கிறார் என பதற்றத்தில் அந்த பாதுகாப்புப் படை வீரர் மேலதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதனால் கொச்சி விமான நிலையம் பரபரப்பானது.
மும்பை செல்ல காத்திருந்த பயணி மனோஜின் அனைத்து உடைமைகளும் முழுமையாக சோதிக்கப்பட்டது. அவரிடம் வெடிகுண்டு உள்ளிட்ட ஆபத்தான எந்த பொருட்களும் இல்லை. ஆனால் தொழிலகப் பாதுகாப்பு அதிகாரியிடம் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருள் பற்றி குறிப்பிட்டதால் வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் பயணி மனோஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இருந்த போதும் மனோஜிடம் தொடர்ந்தும் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications