திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு மனு.. இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

விஜயவாடா: திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஆந்திர உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது

ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபுவை ஆந்திர சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு தற்போது ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் அக்டோபர் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

AP High Court adjourns hearing of Chandrababu Naidu’s bail plea in skill case today

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, ஃபைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஆந்திர மாநிலத்தை ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி அரசு பதிவு செய்தது.

இதில் அங்கள்ளு போலீஸ் வழக்கு, அமராவதி உள்வட்ட சாலை வழக்கு ஆகியவற்றில் சந்திரபாபுவுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. பைபர்நெட் வழக்கில் இன்று முன்ஜாமீன் கிடைக்குமா என்பது தெரிந்துவிடும்..

இதேபோல்திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி கே. சுரேஷ் ரெட்டி முன்பு வரும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஆந்திர சிஐடிக்கு உத்தரவிட்டார். எனவே இன்று சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது விசாரணையில் தெரிந்துவிடும்.

முன்னதாக அமராவதி உள்வட்ட சாலை மோசடி வழக்கு மற்றும் அங்கல்லு கலவர வழக்கு, ஃபைபர்நெட் மோசடி வழக்கு ஆகியவற்றில் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அமராவதி உள்வட்ட சாலை வழக்கில் சந்திரபாபுவின் மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான லோகேஷ் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவரிடம் ஆந்திர சிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+