Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு.. மேற்கு வங்கத்தில் அமலாகும் சட்டத்தின் 6 மேஜர் பாயிண்ட் இதுதான்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனையை கடுமையாக்கும் மசோதா மேற்கு வங்க மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் சட்டமாக்கப்பட உள்ள நிலையில் அதன் 6 முக்கிய அம்சங்களால் இனி குற்றவாளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 9 ம் தேதி 31 வயது நிரம்பிய பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார்.

kolkata aparajitha bill mamata banerjee

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தினர். இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜியை பதவி விலக்ககோரி எதிர்க்கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் தான் பலாத்கார குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். அதன்படி இந்த புதிய சட்டத்திருத்த மசோதாவுக்காக 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

‛அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் மசோதா (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்) என்ற பெயரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி பலாத்கார குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் ஆனந்த் போஸ் ஒப்புதலை தொடர்ந்து சட்டமாக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் இந்த மசோதாவின் 6 முக்கிய அம்சங்கள் பற்றிய விபரம் வருமாறு:

முதல் பாயிண்ட்: இந்த சட்ட திருத்தம் என்பது மத்திய அரசின் பாரதிய நியாய சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய நாகரிக சுரகக்ச சன்ஹிதா 2023-யின் போக்சோ சட்டம் 20212 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி இந்த சட்டங்களில் பலாத்காரம் செய்து கொலை, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தல், கூட்டு பலாத்காரம், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை தெரியப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் 64, 66, 70(1), 71, 72(1), 73, 124(1), 124(2) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் வயது அடிப்படையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் பிரிவுகள் (65(1), 65(2), 70(2)) உள்ளிட்டவற்றிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2வது பாயிண்ட்: பெண் அல்லது குழந்தைகளை பலாத்காரம் செய்து கொலை செய்வது உறுதியாகும் பட்சத்தில் அந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என்பது வழங்கப்படும். அதேபோல் பெண் அல்லது குழந்தைகளை பலாத்காரம் செய்து அவர்கள் கோமா நிலைக்கு சென்றாலும் கூட மரண தண்டனை வழங்கப்பட உள்ளது.

3வது பாயிண்ட்: இந்த சட்டத்திருத்த மசோதா என்பது பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்க இடம் அளிக்கிறது. அதேபோல் தொடர்ந்து பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அபராதத்துடன் ஆயுள் தண்டனை + அபராதம் அல்லது தூக்கு தண்டனை + அபராதம் விதிக்க வழி வகுத்து கொடுக்கிறது.

4வது பாயிண்ட்: மேலும் இந்த மசேதாவின்படி பலாத்காரம் தொடர்பாக வழக்குகளில் முதல் 21 நாட்களில் விசாரணை தொடர்பான முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கு முன்பு 2 மாதம் வரை அவகாசம் இருந்த நிலையில் அது 21 நாளாக குறைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த காலக்கெடுவுக்குள் முதற்கட்ட விசாரணை முடியாவிட்டால் கூடுதலாக 15 நாட்கள் மட்டுமே காலஅவகாசம் என்பது வழங்கப்படும். இந்த விசாரணைக்கான அதிகாரியாக எஸ்பி அல்லது அவரது அந்தஸ்தில் இருப்பவர் தான் நியமிக்கப்படுவார். மற்றவர்கள் விசாரிக்க அனுமதி இல்லை. அதுமட்டுமின்றி மொத்த வழக்கையும் 2 மாதத்தில் கட்டாயமாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5வது பாயிண்ட்: பலாத்கார குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த நீதிமன்றங்கள் பலாத்கார வழக்குகள் தொடர்பான விசாரணை குழுவினரின் வழக்குகளை விசாரிக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்படவர்களின் குடும்பத்துக்கும் நீதி கிடைக்கும் வகையில் ஆதாரங்கள், சாட்சியங்களை சரியாக கையாளும் வகையில் இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

6வது பாயிண்ட்: மேலும் அபராஜிதா பணிக்குழு என்ற பெயரில் போலீஸ் பிரிவில் ‛ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்' (Special Task Force) அமைக்கப்படும். இந்த குழு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பலாத்காரம் அல்லது வன்கொடுமை வழக்குகளை மட்டுமே விசாரிக்கும். இந்த குழு டிஎஸ்பி தலைமையில் செயல்பட உள்ளது என்று 6 முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+