நைஜீரியர்கள் புற்றுநோய் என விமர்சனம்- 100 முறை மன்னிப்பு கேட்கும் கோவா அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
பனாஜி: நைஜீரியர்கள் புற்றுநோய் போன்றவர்கள் என்று விமர்சனம் செய்ததற்காக தாம் 100 முறை மன்னிப்பு கோருவதாக கோவா அமைச்சர் தயானந்த் மன்ரேக்கர் கூறியுள்ளார்.
கோவாவில் நைஜீரியர் ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக போதைப் பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கான்.
இதனிடையே நைஜீரியர்களை காட்டு விலங்குகள் என்றும் புற்றுநோய் போன்றவர்கள் என்றும் அம்மாநில பண்பாட்டுத் துறை அமைச்சர் தயானந்த் சாடியிருந்தார். இது கடும் எதிர்ப்பை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து தாம் தவறு செய்துவிட்டதாகவும் 100 முறை இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தயானந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் தாம் ஒட்டுமொத்த நைஜீரிய மக்களை குறிப்பிடும்படியாக பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications