ஜிண்டால் மருத்துவமனையில் மனைவியுடன் ட்ரீட்மெண்ட் எடுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!
பெங்களூர்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூர் ஜிண்டால் மருத்துவமனையில் மனைவியுடன் மீண்டும் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசப் பிரச்சனையால் அடிக்கடி சோர்வடைந்து காணப்படுகிறார். இந்த பிரச்சனைகளை போக்க அவர் முதல்வராக பதவி ஏற்றவுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருமுறை பெங்களூரில் உள்ள ஜிண்டால் இயற்கை சிகிச்சை மையத்தில் சேர்ந்து 12 நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்த சிகிச்சைக்கு பின்னர் புத்துணர்வு பெற்றவராக டெல்லி திரும்பிய அவர் சுறுசுறுப்பாக தனது பணிகளை செய்து வந்தார்.

தற்போது உடலில் மீண்டும் சேர்ந்துள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றவும், இருமல் மற்றும் நீரிழிவு தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெறவும் விரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று பிற்பகல் மீண்டும் அதே மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். விபரம் வெளியிடப்படாத நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியான சுனிதாவும் இங்கு உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.
அவர்களுக்கு ஜிண்டால் இயற்கை சிகிச்சை மைய வளாகத்தில் தனிக்குடில் ஒதுக்கப்பட்டுள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். 10 நாட்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற திட்டமிட்டுள்ள கெஜ்ரிவால், ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் உரிமம்பெற குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து அம்மாநில ஆம் ஆத்மி கட்சி தலைமை நாளை நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications