பீகார்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பட்டப்பகலில் 4 பேரை தாக்கி 17 லட்சம் “அபேஸ்”!
பாட்னா: பீகாரில் வங்கி ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியினை உண்டாக்கியுள்ளது.
பீகார் மாநிலம், சிவான் மாவட்டம், தீன்தயாள் பஜார் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இன்று காலை வழக்கம்போல் அலுவல்கள் நடந்து கொண்டிருந்தபோது சுமார் 11.30 மணியளவில் ஒரு வாகனத்தில் துப்பாக்கிகளுடன் ஆறுபேர் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களில் 2 பேர் வாசலில் காவலுக்கு நின்றுகொள்ள, மீதி நான்கு பேரும் துப்பாக்கிகளால் சுட்டபடி வங்கிக்குள் நுழைந்தனர். அவர்களை கண்டதும் வங்கிக்குள் இருந்தவர்கள் பீதியில் கூச்சலிட்டபடி வெளியே ஓடத் தொடங்கினார்கள்.
இந்த அமளியை சாதகமாக்கிக் கொண்டு காசாளர் அறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் உள்ளே இருந்த பணம் சுமார் 17 லட்சம் ரூபாயை ஒரு சாக்குப்பைக்குள் திணித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.
கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் வங்கி பணியாளர்கள் 3 பேர் மற்றும் வாடிக்கையாளர்களில் ஒருவர் என 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை சடார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள போலீசார், இந்த துணிகரக் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications