Op ASSAR: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் இடைவிடாத மோதல்- ராணுவ அதிகாரி வீரமரணம்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதிகள் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான "Op ASSAR" நடவடிக்கையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ கேப்டன் தீபக் சிங் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வேட்டையாடி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்பட்டாலும் பாதுகாப்புப் படையினரும் வீரமரணம் அடைந்து வருவது துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் ஷிவ்கர்க்-அஸார் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளை அழிப்பதற்காக "Op ASSAR" என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது அங்கே பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரமான துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் சரமாரி பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே பல மணிநேரம் இடைவிடாமல் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த மோதலில் நமது ராணுவத்தின் கேப்டன் தீபக் சிங், பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஜம்மு காஷ்மீரின் அஸார் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 48 ராஷ்டிரிய ரைபிள் படைப் பிரிவின் ராணுவ கேப்டன் தீபக் சிங் வீரமரணம் அடைந்தார். அப்பகுதியில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications