பதற்றம்.. காஷ்மீரில் 2 ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.. 3 வீரர்கள் பலி - துப்பாக்கிச்சண்டை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூன்ச் மாவட்டம் ரஜோரி பகுதியில் பாதுகாப்பு படையினர் சென்ற 2 ராணுவ வாகனம் மீது தாக்கதல் நடத்தப்பட்டது. இதில் 3 வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூன்ச் மாவட்டம் ரஜோரி பகுதியில் சுரன்கோட்டை எனும் இடம் உள்ளது. இதன் அருகே டிகேஜி எனும் டீரா கீ காலி என்ற இடம் உள்ளது. இங்கு தீவிரவாதிகள் நடமாட்டம் என்பது அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி இங்கு ராணுவத்தினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துவார்கள். இந்நிலையில் தான் உளவுத்துறையின் தகவலின் படி இந்த பகுதியில் கடந்த 19ம் தேதி இரவு முதல் தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்ப பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று 2 ராணுவ வாகனம் அந்த வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள் திடீரென்று ராணுவ வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் ராணுவ வாகனங்களை நோக்கி சுட்டனர். இதில் ராணுவத்தை சேர்ந்த 3 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து அங்கு உடனடியாக கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. அங்கு படை வீரர்களுக்கு உதவி செய்வதற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உயரதிகாரிகள் அங்கு நிலவும் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதுபற்றி இந்திய பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛இந்த பகுதியில் தீவிரவாதிகள் பயங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் தேடுதல் வேட்டை தொடங்கியது. இன்று காலை, மாலை என தொடர்ந்தது. தற்போது துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது'' என்றார்.
தற்போது துப்பாக்கி சண்டை நடக்கும் இந்த பகுதியில் கடந்த மாதமும் கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது 2 கேப்டன்கள் உள்பட ராணுவத்தை சேர்ந்த 5 பேர் வீரமரணமடைந்தனர். இத்தகைய சூழலில் தான் ஒரு மாதத்தில் 2வது முறையாக இங்கு மீண்டும் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications