புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்
புல்வாமா ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் ராணுவத்தினரைக் குறி வைத்து தாக்கியுள்ளனர். இதில் 5 படையினர் படுகாயமடைந்தனர்.
44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ கவச வானம் இந்தத் தாக்குதலில் முற்றிலும் சேதமடைந்தது. அரிஹால் என்ற கிராமத்தில் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகள் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். கடந்த பிப்ரவரி மாதம் இதே பிராந்தியத்தில்தான் சிஆர்பிஎப் வாகனம் தற்கொலைப் படை மூலம் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. தீவிரவாதிகள் கற்கள் வீசியும் தாக்கினர். இந்த தாக்குதலில் 5 படையினர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலின் நோக்கம் நிறைவேறவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. படையினர் பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் தவிர வேறு அசம்பாவிதம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முற்றுகையிடப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 படையினர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications