For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

15 நாள்தான் காலக்கெடு.. முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்.. கைதாக வாய்ப்பு.. கொல்கத்தா போலீஸ் அதிரடி!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அடுத்த 15 நாட்களுக்குள் போலீசில் சரண் அடைய வேண்டும் என்று அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண் ஒருவரால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய முகமது ஷமி

    கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அடுத்த 15 நாட்களுக்குள் போலீசில் சரண் அடைய வேண்டும் என்று அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த வருடம் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். அதேபோல் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக ஹசின் ஜகான் கூறினார். அதன்பின் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.

    இது அப்போது பெரிய புயலை கிளப்பியது. மீடியாக்களில் தினமும் தோன்றி இது தொடர்பாக ஹசின் நிறைய புகார்களை அடுக்கி வந்தார்.

    மாமல்லபுரத்தில் சந்திப்பு கூட்டத்தை நடத்தும் இந்தியா, சீனா.. ஓஹோ இதுதான் காரணமா?மாமல்லபுரத்தில் சந்திப்பு கூட்டத்தை நடத்தும் இந்தியா, சீனா.. ஓஹோ இதுதான் காரணமா?

    சூதாட்ட புகார்

    சூதாட்ட புகார்

    இந்த நிலையில் ஷமி குறித்த புகார் பிசிசிஐ மூலம் விசாரிக்கப்பட்டது. ஹசின் ஜகான் சொன்ன சூதாட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. பிசிசிஐ இது தொடர்பாக நடத்திய விசாரணையில் ஹசின் ஜகான் சொன்ன சூதாட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கூறப்பட்டது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் ஹசின் ஜகான், ஷமி தன்னை மோசமாக தாக்கினார். அவரின் சகோதரரும் தன் மீது தாக்குதல் நடத்தினார். என்னிடம் பணம் கேட்டு தொல்லை செய்தார். பல பெண்களுடன் ஷமி தொடர்பில் இருந்தார் என்று கொல்கத்தா போலீசில் புகார் அளித்தார்.

    ஹசின் ஜகான் புகார்

    ஹசின் ஜகான் புகார்

    ஹசின் ஜகான் அளித்த புகார் தற்போது கொல்கத்தா அலிப்பூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் முகமது ஷமிக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

    கைது

    கைது

    முகமது ஷமி அடுத்த 15 நாட்களுக்குள் போலீசில் சரண் அடைய வேண்டும் என்று அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது . அல்லது அவர் 15 நாட்களுக்குள் பெயில் பெற வேண்டும். இதில் விரைவில் முக்கிய முடிவுகளை எடுப்போம் என்று பிசிசிஐ அமைப்பும் தெரிவித்துள்ளது.

    English summary
    Arrest warrant issued against India cricket Mohammed Shami in his wife Case in Kolkata.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X