பட்ஜெட் தாக்கலின்போது காமெடி செய்த அருண் ஜேட்லி... நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசியம்
பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று பட்ஜெட்டு தாக்கல் செய்தா. அப்போது இடைஇடையே அவர் நகைச்சுவையுடன் பேசியது உறுப்பினர்களிடையே சிரிப்பலையே ஏற்படுத்தியது.
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமமைச்சர் அவ்வப்போது நகைச்சுவையாக பேசி அவையில் சிரிப்பலையை எழுப்பினார். எதிர்க்கட்சிகளை சாடும் வகையில் கவிதை தொனியிலும் அவர் பேசியது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் நேற்று பொது மற்றும் ரயில்வே பட்ஜெட் ஒருகிணைத்து தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இ.அகமது மறைவால் நேற்று அவையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இதனை ஏற்கமறுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதியளித்தார்.
இறுக்கமான சூழல்
இதனால் அதிருப்தியடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் சற்று நேரத்தில் அவையில் இறுக்கமான சூழல் நிலவியது.
ஜேட்லியின் கவிதை
இதனால் பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண் ஜெட்லி அவ்வப்போது ஹிந்தியில் நகைச்சுவையுடன் பேசியதுடன், கவிதைகளையும் வாசித்தார். பட்ஜெட் குறித்து கவிதையில் குறிப்பிட்ட அருண் ஜெட்லி, "இது காலமாற்றத்தை பிரதிபலிக்கும் பெட்ஜெட், இந்த புள்ளியில் திகைத்துப்போய் நின்றுவிடாதீர்கள். காலத்துடன் கைகோர்த்துச் செல்லுங்கள்". என்று கவிதை மொழியாக பேசினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
ஒளி வெளியே வந்துவிட்டது!
மற்றொரு இடத்தில் கருப்புப் பணம் பற்றி குறிப்பிடும்போது, "ஒளி வெளியே வந்துவிட்டது. அது கருப்பையும் வெள்ளையாக்கி கொண்டிருக்கிறது'' என்றார்.
நான் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறேன்
இந்த புதிய பாதையில் வர ஏன் பயப்படுகிறீர்கள். வாருங்கள் நான் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறேன்" என எதிர்க்ட்சிகளை குறிப்பிட்டு பேசினார். அருண் ஜேட்லியின் இந்த பேச்சு அவையில் சிரிப்பலையை எழுப்பியது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications