பீகார் தேர்தல் தோல்வியால் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பாதிப்பில்லை.... அருண் ஜேட்லி
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வி அடைந்ததால் மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் பின்னடைவு என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த தேர்தல் முடிவு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளதாவது:
பீகார் தேர்தல் என்பது ஒரு மாநிலத்துக்கான தேர்தல். இதனால் மத்திய அரசு மேற்கொள்ளும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளோ நாட்டின் பொருளாதரமோ பாதிக்கப்படப் போவதில்லை. பொருளாதார சீர்திருத்தங்கள் என்பது தொடரவே செய்யும்.
பீகார் தேர்தலை மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கான வாக்கெடுப்பாக கூறுவதை ஏற்க முடியாது. ஒவ்வொரு தேர்தலும்தான் வாக்கெடுப்பாக இருக்காது.
பீகாரில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்ததால்தான் வென்றுள்ளன. பாரதிய ஜனதா கட்சிக்கான வாக்கு சதவீதம் குறைந்து போய்விடவில்லை.
பீகார் மாநிலத்துக்கு பொருளாதார நிதி உதவியை அறிவித்துள்ளோம். அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறுதுணையாகவே இருக்கும்.
இவ்வாறு அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications