சீனாவின் ‘பேப்பர்’விசாவுக்கு எதிர்ப்பு: 2 அருணாச்சல் வில் வித்தை வீராங்கனைகளின் பயணம் ரத்து

அருணாச்சல் பிரதேச மாநிலத்தை தனது பகுதியாக கூறிக் கொண்டிருக்கிறது சீனா. இதுதொடர்பான வரைபடத்திலும் அதை தனது நாட்டுக்கு உட்பட்டதாகவே அது காட்டி வருகிறது.
மேலும் அருணாச்சல் பிரதேச மாநிலத்தவர்களுக்கு விசா வழங்கும்போது வழக்கமாக இந்தியர்களுக்கு வழங்குவதைப் போல கொடுக்காமல் தனியாக ஒரு சீட்டில் விசா தருவதை வழக்கமாக வைத்துள்ளது சீனா. இதை இதுவரை இந்தியா உறுதியாகவும், கடுமையாகவும் கண்டிக்காமல் இருந்து வருகிறது.
அதேசமயம், இப்படி தனியாக விசா தரும்போது அந்த விசாவுடன் வருபவர்களை சீனா செல்ல இந்தியா தடை விதித்து வருகிறது. இந்த நிலையில், அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டுவில் வித்தை வீராங்கனைகளுக்கு இப்படி தனியாக விசா கொடுத்துள்ளது சீனா. அவர்களை இந்திய அதிகாரிகள் சீனா செல்ல தடை விதித்து விட்டனர்.
அந்த வீராங்கனைகளின் பெயர் மிஹு மசேலோ மற்றும் யூமி சோரங். இவர்கள் 24 பேர் கொண்ட வில் வித்தை அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த அணி, சீனாவின் வுசியில் நடைபெறும் உலக இளைஞர் வில்வித்தை சாம்பியன் போட்டியில் கலந்து கொள்கிறது.
ஆனால் இரு அருணாச்சல் வீராங்கனைகளுக்கு தனியாக சீனா விசா கொடுத்திருப்பதால் அவர்களை மட்டும் சீனா செல்ல அனுமதிக்கவில்லை இந்திய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள்.
சாதாரண காகிதத் தாளில் சீன தூதரகம்கொடுத்துள்ள இந்த விசா சட்டவிரோதமானது, செல்லாது என்று அதிகாரிகள் கூறி விட்டனர். இதனால் இரு அருணாசச்ல் வீராங்கனைகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது இரு வீராங்கனைகளும் டெல்லியில் உள்ள இந்திய வில்வித்தை சங்க ஓய்வு விடுதியில் தங்கியுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications