அருணாச்சலபிரதேசத்தில் பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம்.. கட்சியை விட்டே வெளியேறிய முன்னாள் முதல்வர்
Recommended Video

இட்டாநகர்: அருணாசலப் பிரதேசம் முன்னாள் முதல்வர் ஜெகாங் அபாங் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக அருணாசலப் பிரதேசம் உள்ளது. அந்த வகையில், முன்னாள் முதல்வர் ஜெகாங் அபாங் பாஜகவில் இருந்து விலகி இருப்பது பாஜகவினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளன.

பாஜகவில் இருந்து விலகல்
இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகாங் அபாங், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக, அபாங் 1978 முதல் 2004 வரை தொடர்ந்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து 9 ஆண்டுகள் முதல்வராக இருந்த அவர், 2003 ல் மீண்டும் முதல்வரான பிறகு தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார்.

மீண்டும் பாஜக
2004 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். இதையடுத்து 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார் ஜெகாங் அபாங்.

மக்கள் ஆதரவு இல்லை
கடந்த 4 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்த அவர், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்போது விலகியுள்ளார். 2014 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவை பெற பாஜக தவறி விட்டது. அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக பாஜக விளங்கி வருகிறது என்று விமர்சனம் செய்துள்ள முன்னாள் முதல்வர் ஜெகாங் அபாங்
|
குற்றச்சாட்டு
பாஜகவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கொள்கைகளை தற்போது பின்பற்றுவதில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications