கெஜ்ரிவாலுக்கு “டீ” கொடுத்த மோடி... ஆனால் பதவியேற்பில் பங்கேற்க மாட்டார்!
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று ஆம் ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10.15 மணியளவில் கெஜ்ரிவால் டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் மோடி இல்லத்திற்கு சென்றார். அவருடன் துணை முதல்வராக பதவியேற்க இருக்கும் மணிஷ் சிசோடியாவும் உடன் சென்றார்.

அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த மோடி, தேநீர் விருந்து அளித்தார். தொடர்ந்து அரைமணி நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமரிடம் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று நடைபெறும் முதல்வர் பதவியேற்புக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் எளிய முறையில் பதவியேற்பு விழா நடத்த முடிவு செய்துள்ளார். ஆடம்பரம் எதுவும் வேண்டாம் என ஒவ்வொரு செயல்பாட்டிலும் காட்டி வருகிறார்.
மேலும் எவ்வித பகைமைக்கும் இடம் கொடுக்காமல் பா.ஜ.கவை சேர்ந்த அமைச்சர்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என நேற்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கினையும் சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணிஷ் சிசோடியா, "கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்.
பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் மகாராஷ்டிராவில் விழா ஒன்றில் பங்கேற்பதாக ஏற்கனவே பிரதமர் தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதால் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications