ஹரியானாவைக் குறி வைக்கும் கெஜ்ரிவால்... 'கெளரவக் கொலையாளர்களை' வசீகரிக்க திட்டம்!
டெல்லி: டெல்லியில் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து அடுத்து அருகில் உள்ள ஹரியானாவையும் கைப்பற்ற களம் குதித்துள்ளது ஆம் ஆத்மி. இந்த மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் அனைத்து 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
ஹரியானாவில் நடைபெறும் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்த கையோடு, ஹரியானாவில் உள்ள 21 மாவட்டங்களிலும் படு வேகமாக கிளைகளையும் திறந்து படு ஜரூராக பணிகளைத் தொடங்கி விட்டது ஆம் ஆத்மி.
ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் தங்களது முதல்வர் வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபலமான அரசியல் திறனாளாய்வருமான யோகேந்திர யாதவை ஆம் ஆத்மி அறிவிக்கவுள்ளது. யாதவ்தான், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் கொள்கை வகுப்பாளராக இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.

படுவேகமாக தீரும் உறுப்பினர் சேர்க்கை பாரம்
ஹரியானாவில் உறுப்பினர் சேர்க்கை படு வேகமாக நடந்து வருகிறது. அங்கு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வேகமாக விற்றுத் தீர்ந்ததால் ஆம் ஆத்மிக்கே வியப்பாகி விட்டதாம்.

கெளரவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் திட்டம்
ஹரியானாவின் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று கெளரவக் கொலை. அங்கு இத்தகைய கொலைகள் சர்வ சாதாரணம். எனவே முதலில் இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானித்துள்ளது ஆம் ஆத்மி.

சாதித் தலைவர்கள், இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை
கெளரவக் கொலைகளுக்கு உத்தரவிடுவது சாதித் தலைவர்கள்தான். கிராமத்தில் இவர்கள் வைத்ததுதான் சட்டம். எனவே முதலில் இவர்களைப் பார்த்துப் பேசி அவர்களுக்கு அறிவுறுத்தல்களை கொடுத்து தங்களுக்கு ஆதரவாகத் திருப்ப முயற்சிக்கிறது ஆம் ஆத்மி. மேலும் இளைஞர்களையும் அது சந்தித்து காதல் திருமணம் ஆகியவற்றால் ஏற்படும் நன்மைகளை விளக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.

ஆதரிக்க மாட்டோம்
அப்படியானால் கெளரவக் கொலையாளிகளை தங்களுக்கு ஆதரவாக திருப்பி அவர்களது கோரிக்கைளை நிறைவேற்ற ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்துள்ளார் யோகேந்திர யாதவ். அவர்களுடன் பேச்சுவார்த்தைதான் நடத்தப் போகிறோமே தவிர அவர்களது செயல்களை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆனால் ஒரே கோத்திரத்திற்குள் திருமணம் நடத்த ஆதரவு
ஆனால், ஒரே கோத்திரத்திற்குள், உட்பிரிவுக்குள்தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று ஹரியானாவில் பெரும்பான்மையாக உள்ள ஒட்டுமொத்த ஜாட் சமுதாயமும் விரும்பினால் அதை ஆதரிப்பதில் தவறில்லையே என்று கேட்டுள்ளார் யாதவ்.

காங்கிரஸ் கண்டனம்
ஆனால் ஆம் ஆத்மியின் திட்டத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி மாஜிக் ஹரியானாவில் எடுபடுமா
டெல்லி பெரும்பாலும் நகர்ப்புற வாக்காளர்கள் நிரம்பிய சிறிய மாநிலம். ஆனால் ஹரியானா அப்படி இல்லை, பெரும்பாலும் கிராமங்கள்தான். சாதிதான் இங்கு முக்கியமாக பார்க்கப்படும். எனவே டெல்லியில் நடந்த மாயாஜாலத்தை ஹரியானாவிலும் ஆம் ஆத்மி நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications