பெண்களுடன் உல்லாசமாக இருந்த குழந்தைகள் நலத்துறை அமைச்சர் டிஸ்மிஸ்- அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெண்களுடன் உல்லாசமாக இருந்த குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சந்தீப் குமாரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் சந்திப் குமார் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி கைப்பற்றப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று அமைச்சர் சந்தீப் குமாரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Arvind Kejriwal sacks minister Sandeep Kumar

சந்தீப் குமாருக்கு எதிராக ஆட்சேபணைக்குரிய சிடி கைப்பற்றப்பட்டதால் அவரை பதவியில் இருந்து நீக்கியதாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த கட்சி வட்டாரங்கள் கூறுகையில், நேற்று அமைச்சர் சந்தீப்குமார் தொடர்பான சி.டி. முதல்வரின் பார்வைக்கு சென்றுள்ளது. அதில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது. இதையடுத்து அவரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கி கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

36 வயதாகும் சந்தீப் குமார் டெல்லி சுல்தான்பூர் மஜ்ரியா தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அமைச்சரவையில் சமூகநலன், பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+