அமைச்சரின் ஆபாச சிடி.... அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய ஷீலா தீட்சித் வலியுறுத்தல்
டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சந்தீப்குமார் 2 பெண்களுடன் ஆபாசமாக இருந்த சி.டி. வெளியான சம்பவத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவால் அரசில் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சி.டி. வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சந்தீப் குமார் தொடர்பான ஆபாச வீடியோவில் அவருடன் நெருக்கமாக இருக்கும் பெண் டெல்லி சுல்தான்புரி போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த ஆண்டு ரேசன் கார்டு தொடர்பாக அமைச்சர் சந்தீப் குமாரை அணுகியபோது அவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து சந்தீப் குமார் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், நாட்டையே கேவலப்படுத்திய இந்த விவகாரத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications