மோடிக்கு எதிராக ஆம் ஆத்மியின் பிரதம வேட்பாளராகிறேனா...?: கெஜ்ரிவால் பதில்
பெசாராஜி: வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளரான நரேந்திரமோடியை எதிர்த்து போட்டியிடுவதை மறுப்பதற்கில்லை' என சூசகமாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மிக் கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
16வது லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப் படுவதற்கு முன்னதாகவே அரசியல் களம் சூடிபிடிக்க ஆரம்பித்து விட்டது. பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப் பட்டுள்ளார். காங்கிரளின் மறைமுக பிரதம வேட்பாளராக ராகும் கருதப் படுகிறார்.

இந்நிலையில் கட்சி ஆரம்பித்து ஓராண்டிற்குள் டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சியும் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக பிரதம வேட்பாளரான மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலை களமிறக்க அக்கட்சி முடுவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதற்குத் தகுந்தாற்போல், நரேந்திரமோடி நாட்டின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்தது.
இந்நிலையில், நேற்று நரேந்திரமோடி ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்வதற்காக 4 நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றார் கெஜ்ரிவால்.
அப்போது அங்கு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திரமோடியை எதிர்த்து நான் போட்டியிடுவேனா இல்லையா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். தேர்தலில் போட்டியிடுவதோ போட்டியிடாமல் இருப்பதோ பெரிய பிரச்சினை அல்ல.
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலாதீட்சித் மீது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவர் கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது அவரை அந்த வழக்கில் இருந்து பாதுகாக்க காங்கிரஸ் செய்த ஏற்பாடாகும்' என இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications