ஜெ. ஸ்டைலில் மோடி அரசு: நிதித்துறை To சுற்றுலா To சிறுபான்மையினர் நலன்- செயலாளர் மாற்றம்
டெல்லி: மூத்த ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் மாயாராம் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 15 நாட்களில் இது அவருக்கு 2வது இடமாற்றமாகும்.
முன்னதாக அவர் நிதித்துறையிலிருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது சிறுபான்மையினர் நலத்துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியானது, சுற்றுலாத்துறை பதவியை விட மிகவும் அதிகாரம் குறைந்ததாகும்.
நேற்று நள்ளிரவில் மாயாராமை சுற்றுலாத்துறையிலிருந்து இடமாற்றம் செய்யும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன கொடுமை என்றால், நாளைதான் சுற்றுலாத்துறை செயலாளர் பொறுப்பை ஏற்கவிருந்தார் மாயாராம். ஆனால் அதற்குள்ளாகவே அவருக்கு 2வது இடமாற்றத்தைக் கொடுத்துள்ளது மத்திய அரசு.
மாயாராமை சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் பதவியில் நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்து நேற்று இரவு உத்தரவிட்டது.
இதுவரை சிறுபான்மையினர் நல விவகாரத்துறை செயலாளராக இருந்து வந்த லலித் பன்வார், சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுதவிர இன்னொரு முக்கிய மாற்றமாக, நிதித்துறை தலைமை பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவில் வசித்து வரும் பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications