ஷாக்! ரூ.2000 வாபஸ் பெறப்பட்ட அதே நாளில்.. அரசு அலுவலகத்தில் சிதறி கிடந்த ரூ.2000 நோட்டுகள்
ஜெய்ப்பூர்: புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், கட்டுக்கட்டாக 2000 நோட்டு கட்டுகள் ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. 2016இல் ரொக்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அப்போது 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இப்போது அதற்கான தேவை நிறைவடைந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் செப். 31ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்: இந்த அறிவிப்பு வெளியாகி சில மணி நேரத்தில் அரசு அலுவலகம் ஒன்றில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இங்கு ராஜஸ்தான் தலைமை அலுவலகத்தின் அடித்தளத்தில் பூட்டியிருந்த பீரோவில் கோடிக் கணக்கில் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணைக்காக போலீசார் ஏழு ஊழியர்களை இப்போது பிடித்து வைத்துள்ளனர். அங்கே இருந்த அந்த சூட்கேஸில் ரூ.2,000 மற்றும் ரூ.500 மதிப்புள்ள நோட்டுகள் இருந்ததாக தெரிவித்தனர். ரிசர்வ் வங்கி ரூ.2,000 கரன்சி நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்ற நாளில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமைச் செயலாளர் உஷா சர்மா, போலீஸ் டிஜிபி உமேஷ் மிஸ்ரா, ஆகியோர் நேரடியாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிடம் விளக்கமளித்தனர்.
எங்கே: இது குறித்துக் கூடுதல் காவல்துறை இயக்குநர் தினேஷ் மற்றும் ஜெய்ப்பூர் ஆணையர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா கூட்டாகச் செய்தியாளர்களிடம் சந்தித்தனர். அவர்கள் கூறுகையில், "அங்கே இருந்து கோப்புகள் மற்றும் டிராலி சூட்கேஸில் பணம் மற்றும் தங்கம் கண்டறியப்பட்டது. ரூ.2.31 கோடி ரொக்கம், ஒரு கிலோ தங்கம் ஆகியவை அங்கே இருந்தது. இது குறித்து 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
விரைவில் அங்கு என்ன நடந்தது என்பது நமக்கு முழுமையாகத் தெரிய வரும். பணம் மற்றும் தங்கம் மீட்கப்பட்ட அலமாரி பல மாதங்களாகப் பூட்டியே இருந்து இருக்கிறது. அந்த அலமாரியின் அணுகல் உள்ள ஊழியர்களிடம் போலீசார் உரிய விசாரணை நடத்துவார்கள். பணம் யாருடையது, எப்படி வந்தது என விசாரணை நடக்கிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இந்த அலமாரி சுமார் 2 ஆண்டுகள் மூடப்பட்டே இருந்தது போலவே தெரிகிறது" என்று சாடியுள்ளார்.
விசாரணை: இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து கடுமையாகச் சாடியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர் தனது ட்விட்டரில், "ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம் மீட்கப்பட்டது, கெலாட் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.. ராஜஸ்தான் ஊழல்வாதிகளின் புகலிடமாக்க இருக்கிறது" என்றார்.
மேலும் இது குறித்து முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications