மணிப்பூர் சம்பவம்.. சட்டசபையில் ராஜஸ்தான் அமைச்சர் பேச்சு.. ஆடிப்போன அசோக் கெலாட்.. உடனே டிஸ்மிஸ்
ஜெய்ப்பூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக, மணிப்பூர் வன்முறை விவகாரத்துடன் ஒப்பிட்டு பேசிய அம்மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா உடனடியாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
மணிப்பூரில் இரண்டு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கொடூரமான வீடியோவை பார்த்து வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி,மிகுந்த வேதனையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் நிற்கிறேன்.

மணிப்பூர் மகள்களுக்கு நேர்ந்த சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மணிப்பூரில் நடந்த இந்த சம்பவம் நாகரிகமான எந்த சமுதாயத்துக்கும் அவமானம். இது ஒட்டுமொத்த நாட்டையும் அவமானப்பட செய்துள்ளது. நாட்டு மக்கள் 140 கோடி பேரும் வெட்கி தலைகுனிந்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என அனைத்து முதல்வர்களையும் கேட்டுக் கொள்கிறேன். ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கை வலுப்படுத்தி பெண்களை பாதுகாக்க வேண்டும். மக்கள் சட்டம் - ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளித்து பெண்களை மதிக்க வேண்டும் " என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானை குறிப்பிட்டு பேசிய அடுத்த இரண்டு நாளில் அம்மாநில அமைச்சர் ஒருவரே , தங்கள் அரசு பெண்களை பாதுகாக்க தவறிவிட்டதாக கூறியுள்ளார்.
&ராஜஸ்தான் குறைந்தபட்ச வருமான உத்தரவாத மசோதா 2023' மீதான விவாதத்தின் போது, வெள்ளிக்கிழமை சட்டசபையில் அமைச்சர் ராஜேந்திர சிங் குதா பேசும் போது, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டோம் என்பது உண்மை தான். ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதை பார்க்கும் போது, மணிப்பூர் பிரச்சினையை எழுப்புவதற்கு பதிலாக , இந்த விஷயத்தில் நாம் சரியாக இருக்கிறோமா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
இந்த பேச்சை கேட்டு ஆடிப்போன ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,இன்று மாலையே அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தார். அதை ஏற்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து ராஜேந்திர சிங் குதா ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து இன்று அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனிடையே பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர் இது பற்றி கூறும் போது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(2)ன்படி, கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் மாநில அரசு செயல்படுகிறது. எனவே ஒரு அமைச்சர் பேசினால், முழு அரசும் பேசுகிறது என்று அரசியல் சாசனம் சொல்கிறது. அந்த வகையில் அமைச்சர் குதா இந்த காங்கிரஸ் அரசை அம்பலப்படுத்தியுள்ளார். நான் அவரை வாழ்த்துகிறேன், ஆனால் இது வெட்கக்கேடான விஷயம்." என்று ஆவேசமாக கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications