Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாச வார்த்தைகளால் கேலி செய்த கோச், வீரர்.. ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை பரபரப்புப் புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஒருவர், தனது அணி பயிற்சியாளர் மற்றும் ஒரு சர்வதேச வீரர் மீது பாலியல் சில்மிஷப் புகாரைக் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தன்னிடம் ஆபாசமான முறையில் அவர்கள் பேசியதாக அந்த வீராங்கனை புகார் கூறியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பத்தால் வீரர், வீராங்கனைகள் அதிர்ந்துள்ளனர்.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியா ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவிலும் கலந்து கொள்கிறது.

மனோஜ் ரானா

மனோஜ் ரானா

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் மனோஜ் ரானா மீது பாலியல் சில்மிஷ புகார் எழுந்துள்ளது. அதேபோல சக வீரர் சந்தன் பதக் மீதும் 20 வயதான அந்த வீராங்கனை புகார் கூறியுள்ளார்.

பயிற்சிமுகாமில் சில்மிஷம்

பயிற்சிமுகாமில் சில்மிஷம்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நடந்த பயிற்சி முகாமின்போது இருவரும் தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும், ஆபாச வார்த்தைகளைப் பயனபடுத்தி கமென்ட் செய்ததாகவும் அந்த வீராங்கனை குற்றம் சாட்டியுள்ளார்.

டிரஸ் குறித்தும், இன்னர் குறித்தும் ஆபாச வர்னணை

டிரஸ் குறித்தும், இன்னர் குறித்தும் ஆபாச வர்னணை

இதுகுறித்து அவர் போலீஸிலும் புகார் கொடுத்துள்ளார். அதில், பயிற்சி முகாமின்போது இருவரும் எனது டிரஸ் குறித்தும், நான் அணிந்திருந்த உள்ளாடை குறித்தும் அறுவெறுக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து தெரிவித்தனர்.

கேலி செய்தனர்

கேலி செய்தனர்

என்னைத் தொடர்ந்து கேலி செய்தபடி இருந்தனர். எனது சுய மரியாதையையும், கெளரவத்தையும் குலைக்கும் வகையில் பேசினர்.

வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகள்

வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகள்

இருவரும் பயன்படுத்திய பல வார்த்தைகளை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அநாகரீகமாக இருந்தன. இதனால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

மிரட்டினர்

மிரட்டினர்

இதுகுறித்து தலைமைப் பயிற்சியாளரிடம் நான் முறையிட்டேன். அவர் இருவரையும் அழைத்து என்னிடம் மன்னிப்பு கேட்க கோரியபோது, அவர்கள் கேட்க மறுத்தனர். மாறாக மனோஜ் ரானா என்னை மிரட்டினார். நான் மீண்டும் அவர்களால் தாக்குதலுக்குள்ளாவேன் என்று அஞ்சுகிறேன் என்று கூறியுள்ளார் அந்த வீராங்கனை.

செப்டம்பர் 2ம் தேதி

செப்டம்பர் 2ம் தேதி

இந்த சம்பவம் செப்டம்பர் 2ம் தேதி நடந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் கழகத்திடம் புகார் கூறியபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+