ஹிந்தி பட தயாரிப்பாளர், 2ஜி வழக்கின் குற்றவாளி கரிம் மொரானி வீட்டில் துப்பாக்கி சூடு!
மும்பை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பாலிவுட் பட தயாரிப்பாளர் கரிம் மொரானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் பாலிவுட் படத் தயாரிப்பாளர் கரிம் மொரானி. இந்த வழக்கு தொடர்பாக 2011ம் ஆண்டு சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்ட கரிம் மொரானி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டுள்ளன. கடந்த மாதம் மும்பையில் உள்ள இவரது வீட்டிற்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த பரபரப்பு ஓய்வதற்குள் நேற்று மீண்டும் அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் ஐந்து ரவுண்டுகள் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
அதிருஷ்டவசமாக கரிம் மொரானி உள்பட குடும்பத்தார் அனைவரும் காயமின்றி தப்பினர். இதுகுறித்து மும்பை போலீசில் கரிம் மொரானி தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் தனக்கு நிழலுலக தாதா ரவி பூஜாரியிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகவும், எஸ்எம்எஸ் மூலமாக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications