‛‛கோவில் பூசாரிகள் எல்லாம் ரேப்பிஸ்ட்’’ சர்ச்சையை கிளப்பிய காங்., எம்எல்ஏ.. தட்டித்தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி: இந்துக்கள் இருக்கும் இடத்தில் தவறுகள் நடக்கும். கோவில் பூசாரிகள் அனைவரும் ரேபிஸ்ட் என சர்ச்சைக்குரிய வகையில் கூறிய அசாம் காங்கிரஸ் எம்எல்ஏ அஃப்தாப் உதீன் மொல்லா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அசாமில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா உள்ளார். இங்குள்ள ஜலேஸ்வர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அஃப்தாப் உதீன் மொல்லா. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

Assam Congress MLA Aftab Uddin Molla arrested after her says ‛‛Mandirs priest are rapists’’

இந்நிலையில் தான் அஃப்தாப் உதீன் மொல்லா தெரிவித்த கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.

அதாவது அஃப்தாப் உதீன் மொல்லா சமீபத்தில் ‛‛இந்துக்கள் இருக்கும் இடத்தில் தவறுகள் நடக்கும். கோவில் பூசாரிகள் மற்றும் நாம்கார் வழிபாட்டு தலங்களின் பாதுகாவலர்கள் ரேப்பிஸ்ட்'' என கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி விவாதத்தை கிளப்பியது. இதனால் அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து அஃப்தாப் உதீன் மொல்லா விளக்கம் கேட்டு அசாம் காங்கிரஸ் கட்சி தலைவர் பூபன் பாரா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். மேலும் இதுபற்றி அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மாவிடம் நேற்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர், ‛‛சிலர் தவறான கருத்தை தெரிவித்துவிட்டு மன்னிப்பு கேட்கின்றனர். ஆனால் சட்டம் தன் கடமையை செய்யும்'' என தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக அடுத்த சில மணிநேரங்களில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ அஃப்தாப் உதீன் மொல்லாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கவுஹாத்தியில் எம்எல்ஏ வாஸேத் அலி வீட்டில் இருந்த நிலையில் போலீசார் நேற்று இரவு அவரை பிடித்து கைது செய்தனர். அஃப்தாப் உதீன் மொல்லா மீது இருதரப்பினர் இடையே மோதலை தூண்டுதல், குறிப்பிட்ட மதத்தினரின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+