தாயின் மணிக்கொடி... அஸ்ஸாம் கிராமத்தின் அசரடிக்கும் பிரமாண்ட தேசியக் கொடி!
பஸ்கா, அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் மிக நீளமான தேசியக் கொடியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவின் 72வது சுதந்திர தினம் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் சூடு பிடித்துள்ளன.

இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி ஒரு சாதனை படைத்துள்ளனர். அங்குள்ள பஸ்கா மாவட்டத்தில் உள்ள உப்பார்குட்டி என்ற கிராமத்தில் 3.5 கிலோமீட்டர் நீளமான தேசியக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சன்ரைஸ் யூத் கிளப் என்ற இளைஞர் குழு இந்த கொடியை உருவாக்கியுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி விசேஷமாக இதைத் தயாரித்தது அந்தக் குழு கூறியுள்ளது.
Sunrise Youth Club of Uparkhuti village in Assam's Baksa have made a 3.5 Kilometre long national flag. #IndependenceDayIndia pic.twitter.com/AowG50Xu5f
— ANI (@ANI) August 15, 2018


Click it and Unblock the Notifications
