ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: பிப்.3ல் இறுதி வாதம்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளை மறுமதிப்பீடு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜான் மைக்கேல், நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
ஜெயலலிதாவிடம் கைப்பற்றப்பட்ட தங்கம், வைர நகைகள் சென்னை கடற்கரை சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்தது. திடீரென, பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் கடந்த 6ஆம் தேதி திடீரென சென்னை வந்து ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய நகைகள் அனைத்தும் பெங்களூருக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதி வாதத்தை அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று நீதிபதி மைக்கேல் டி.குமார் உத்தரவிட்டார்.
பவானி சிங் வாதத்தையடுத்து, ஜெயலலிதா தரப்பை சேர்ந்தவர்களின் வாதம் தொடங்கும். இந்த வழக்கில் இறுதி வாதம் தொடங்க இருப்பதால் வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications