மோசடி வழக்கு.. அகமது படேலின் மருமகனின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
அஹமதாபாத் ; ரூ .16,000 கோடி ஸ்டெர்லிங் பயோடெக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் மருமகன் இர்பான் சித்திக்குக்கு சொந்தமான ரூ .8 கோடிக்கு மேல் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் நடிகர்கள் டினோ மோரியா, சஞ்சய் கான் மற்றும் டி.ஜே. அஹுல் ஆகியோரின் சொத்துக்களையும் இதே வழக்கிற்காக அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் சார்பில் அதன் இயக்குநர்கள் - நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, சேட்டன்குமார் ஜெயந்திலால் சந்தேசரா மற்றும் தீப்தி சந்தேசரா ஆகியோர் 14,500 கோடி வங்கி கடன் மோசடி செய்துள்ளனர்.
இந்நிலையில் நிதிக் குற்றங்களை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் படி, ரூ .16,000 கோடி ஸ்டெர்லிங் பயோடெக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சேரந்த தொழில் அதிபர்கள் சந்தேசரா சகோதர்கள் சிக்கி உள்ளனர், இவர்களிடம் இருந்து றும் இர்பான் சித்திகி, டினோ மோரியா மற்றும் டி.ஜே.அகீல் ஆகியோருக்கு பணம் கைமாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையில் டி.ஜே.அகீல் சந்தேசரா சகோதரர்களிடம் இருந்து .5 12.54 கோடியும், இர்பான் சித்திகிக்கு 3.51 கோடி ரூபாயும், டினோ மோரியாவுக்கு 1.4 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.. அந்த பரிவர்த்தனைகள் குற்ற வருமானமாகக் கருதப்படுகின்றன.
இதற்காக இர்பான் சித்திகியின் 2.41 கோடி சொத்துக்கள், டி.ஜே.அகீலின் 1.98 கோடி சொத்துக்கள் மற்றும் டினோ மோரியாவின் 1.4 கோடி சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
சந்திசாரா சகோதரர்கள் மீதான வழக்கில் குற்றத்தின் வருமானமாகக் கருதப்படும் 16,000 கோடியில், இதுவரை, 14,521 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications