அரசியலில் என் பயணம் முடியவில்லை! - எல் கே அத்வானி
டெல்லி: அரசியலில் என் பயணம் இன்னும் முடியவில்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் எல் கே அத்வானி கூறியுள்ளார்.
வாஜ்பாய்க்கு அடுத்து பா.ஜனதாவில் மூத்த தலைவராக இருந்து வருபவர், 86 வயது எல்.கே.அத்வானி. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானி பா.ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரால் பிரதமராக முடியவில்லை.
இந்த பொதுத் தேர்தலிலாவது தன் பிரதமர் கனவு நிறைவேறும் என எதிர்ப்பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. அவரது எதிர்ப்பையும் மீறி நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் ஆக்கப்பட்டார்.

இதனால் கட்சிப் பணிகள், பிரச்சாரங்களில் ஒதுங்கியே இருந்தார் அத்வானி. இந்த நிலையில் நேற்று தனது அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை என்று, அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் எழுதியிருப்பதாவது:
"கராச்சியில் எனது பதினான்கரை வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தபோது வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தேன். வீட்டை விட்டு வெளியேறிய நான் முதலில் கராச்சியிலும், பிரிவினைக்குப்பின் ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராகப் பணிபுரிந்தேன்.
55 ஆண்டுகளுக்கு முன்பு எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியபோது எனது வாழ்க்கையின் அர்த்தம் மேலும் மேம்படுத்தப்பட்டது. முதலில் பாரதீய ஜனசங்கத்தில் பணியாற்றினேன். இப்போது பாரதீய ஜனதாவிலும் பணியாற்றி வருகிறேன். என்னுடைய இந்த அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை...," என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்வானி இந்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும், அவர் ராஜ்ய சபை எம்பியாகிவிடுவார் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், அடுத்த தேர்தலில் தான் விரும்பும் தொகுதியில் அத்வானி போட்டியிடலாம் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications