சுற்றுலா படகு கவிழ்ந்து “நீருக்குள் மூழ்கிய 40 பேர்".. இதுவரை 21 பேர் பலி.. மற்றவர்கள் நிலை என்ன?
மலப்புரம் : கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மூழ்கிய படகில் போதுமான உயிர்காக்கும் வசதிகள் இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரை அருகே தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்தக் கப்பலில் 40 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் நபர்களுடன் இணைந்து நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகு கவிழ்ந்து பலர் மூழ்கிய பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்த விபத்தில் தற்போது வரை 5 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 8 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பரப்பனங்காடி மற்றும் தனுர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தனுர் பகுதியில் ஒருவரது இல்ல விழாவில் கலந்துகொள்ள வந்தவர்கள் படகு சவாரி செய்த போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Malappuram, Kerala | Six people died after a tourist boat capsized near Tanur in Malappuram district of Kerala. Rescue operations are underway. pic.twitter.com/gPi0u2HuIi
— ANI (@ANI) May 7, 2023
படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும், போதிய உயிர்காக்கும் கருவிகள் படகில் இல்லை என்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மூழ்கிய படகில் இருந்து நீந்தி தப்பித்த இளைஞர் ஒருவர், குறைந்தது 30-40 பேர் கப்பலில் இருந்ததாகவும், இரண்டு அடுக்குகள் இருந்தன, ஆனால் படகு கவிழ்ந்த பிறகு, கீழ்பகுதியின் உள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாதபடி சிக்கிக்கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications