4 மாநில மழை வெள்ளம்... இதுவரை 81 பேர் பலி.. 80 லட்சம் பேர் பாதிப்பு
டெல்லி: குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவரை 81 பேர் பலியாகியுள்ளனர். வீடுகள், உடமைகளை இழந்து 80 லட்சம் பேர் தவித்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில்தான் உயிர்ப்பலி அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 48 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தானில் 28 பேரும், ஒடிஷாவில் 5 பேரும் இறந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மேற்கு வங்காலத்தில் 12 மாவட்டங்களில் 210 தாலுகாக்களில் 9691 கிராமங்கள் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் 40 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஒடிஷாவில் 5 4.80 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்காலத்தில் 121 படகுகள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 1537 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலு்ம் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜலோர், ஜால்வார், பரான், சிரோஹி, பார்மர், துங்கார்பூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

குஜராத்தைப் பொறுத்தவரை 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் உணவுப் பொட்டலங்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன. தற்காலிக குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வெள்ள பகுதிகளில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒடிஷாவில் ஜெய்ப்பூர் மயூர்பன்ச், கியோன்ஜார், பத்ரக், பாலசோர், ஜார்ஸ்குடா, தியோகர் ஆகிய மாவட்டங்கள் பலத்த பாதிப்பை சந்தித்துள்ளன. 7 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications