For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நரேந்திர மோடிக்கு முகேஷ் அம்பானி 'பயங்கர' பாராட்டு!

Google Oneindia Tamil News

டெல்லி: மேக் இன் இந்தியா பிரசாரத்தை இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் அதிபரும், காங்கிரஸ் தரப்புக்கு நெருக்கமானவர் என்று அடையாளம் காணப்பட்டவருமான முகேஷ் அம்பானி, பிரதமர் மோடிக்குப் புகழாரம் சூட்டிப் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. அவர் இளைஞர்களைக் கனவு காணத் தூண்டி அதை நடைமுறைப்படுத்தவும் ஊக்குவிக்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும் அடுத்த 15 மாதங்களில் தனது நிறுவனத்தின் சார்பில் ஒன்றே கால் லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பை அளிக்க தான் உறுதி தருவதாகவும் அம்பானி தெரிவித்தார்.

முகேஷ் அம்பானியின் பேச்சிலிருந்து....

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இந்தியத் தொழில்துறைக்கு இது மிகவும் முக்கியமானது.

1.25 புதிய வேலைகள்

1.25 புதிய வேலைகள்

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக எனது நிறுவனத்தின் சார்பில் அடுத்த 15 மாதங்களில் 1.25 லட்சம் புதிய வேலைகளை நான் உருவாக்க உறுதியளிக்கிறேன்.

சிறப்பாக கனவு காண்கிறார்

சிறப்பாக கனவு காண்கிறார்

பிரதமர் மோடி சிறப்பாக கனவு காண்கிறார். அதை நிறைவேற்றவும் செய்கிறார். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் பணியாற்றுகிறார். பல கோடி இந்தியர்களையும் தன்னைப் போல கனவு காணச் செய்து அதை நனவாக்கவும் தூண்டுதலாக இருக்கிறார்.

இந்தியாவை மேம்படுத்தும்

இந்தியாவை மேம்படுத்தும்

பிரதமரின் இந்தத் திட்டமானது உலக அளவில் இந்தியாவை போட்டியில் சிறந்த தொழில்துறையாக பரிமளிக்க வைக்க உதவும். இந்தியாவை இது மேம்படுத்தும்.

இந்தியாவால் சாதிக்க முடியும்

இந்தியாவால் சாதிக்க முடியும்

இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகமரமாக தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்.

மிகவும் மலிவான விலையில்

மிகவும் மலிவான விலையில்

ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 7 என்ற செலவுக் கணக்கில்தான் இந்தியாவின் மங்கள்யான் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பெரிய நகரங்களில் ஆட்டோவில் செல்வதற்கு ஆகும் செலவை விட இது குறைவாகும்.

மோடி வந்த பிறகு பெரும் மாற்றம்

மோடி வந்த பிறகு பெரும் மாற்றம்

மோடி பிரதமராக வந்த பின்னர் சர்வதேச முதலீட்டாளர்களின் திட்டங்கள் மாறியுள்ளன. இந்தியாவை நோக்கி அவர்கள் வர ஆரம்பித்துள்ளனர். இதற்காக மோடிக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவரது தலைமை, தொழில்துறைக்கு பெரும் உத்வேகம் கொடுத்துள்ளது என்றார் அம்பானி.

ஜப்பானுக்குப் போகாத அம்பானி

ஜப்பானுக்குப் போகாத அம்பானி

முன்னதாக ஜப்பானுக்குப் பிரதமர் மோடி விசிட் அடித்தபோது அவருடன் தொழில்துறைக் குழுவும் உடன் சென்றது. அடானி உள்ளிட் பலரும் அதில் இடம் பெற்றிருந்தனர். ஆனால் முகேஷ் மட்டும் போகவில்லை. இதனால் சர்ச்சையும் வெடித்தது நினைவிருக்கலாம்.

English summary
Reliance Industries Chairman Mukesh Ambani on Thursday described the launch of Prime Minister Narendra Modi's "Make in India" campaign as a "historic" day for Indian industry and said his company will create 1.25 lakh new jobs over the next 12-15 months as part of the movement. "PM Modi dreams and does, working 14 hours a day and motivates a billion Indians to dream and do," said Mr Ambani, who was among the few corporate honchos to make a speech at the marquee event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X