வெள்ளத்தோடு சேர்ந்து கேரளாவை உலுக்கும் நிலச்சரிவு.. 22 பேர் பலியான சோகம்
திருவனந்தபுரம்: கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளநீரில் சிக்கி 22 பேர் பலியாகிவிட்டனர்.
கடவுளின் தாய் வீடு என்ற கூறப்படும் கேரள மாநிலத்தில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் நீரில் மூழ்கின.
இதையடுத்து வெள்ள அபாயத்தில் உள்ள கிராம மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளை இழந்த மக்கள்
கேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரெட் அலர்ட்
ஓரிரு நாட்கள் விட்டிருந்த மழை மீண்டும் தொடங்கியது. இதனால் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கொச்சி விமான நிலையம் மூடல்
கேரள மாநிலத்தில் நேற்றைய தினம் மீண்டும் மழை பெய்தது. இதனால் பெரும்பாலான அணைகள் நிரம்பி முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

22 பேர் பலி
மலப்புரம் மாவட்டத்தில் பெருங்காவு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதேபோல் கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, பத்தினம்திட்டா ஆகிய பகுதிகளில் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு 14 பேர் பலியாகினர். இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேற்று மட்டும் 22 பேர் பலியாகிவிட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications