பெங்களூரில் காவலாளியை கொன்று ஏடிஎம் மிஷினை உடைக்க முயற்சி! சிசிடிவியில் காட்சிகள் பதிவு
பெங்களூர்: ஏடிஎம் காவலாளியை கொலை செய்துவிட்டு, ஏடிஎம் மிஷினை உடைக்க மர்ம நபர் முயன்ற சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர் மகாதேவபுரா காவல் நிலைய எல்லையிலுள்ள ஈஜிபுரா பகுதியுள்ளது யூனியன் வங்கியின் ஏடிஎம். இங்கு மினாதுல்லா பாரிபா என்ற 25 வயது அசாம் இளைஞர் செக்யூரிட்டி கார்டாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 3.10 மணி்யளவில் இவரை தலையில் அடித்து கொலை செய்த கொள்ளை நபர், ஏடிஎம் மிஷினை உடைக்க முயன்றுள்ளார். முயற்சி தோல்வியடைந்ததால், அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ஏடிஎம் முதல் மாடியில் இருப்பதாலும், நேற்று நாள் முழுவதும் வாடிக்கையாளர் யாருமே வரவில்லை. இரவில், ஷிப்ட் மாற்றுவதற்காக வேறு காவலாளி வந்தபோதுதான், பாரிபா கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மகாதேவபுரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏடிஎம் மையத்திலுள்ள சிசிடிவி காமிராவில் கொலை சம்பவம் அப்பட்டமாக பதிவாகியுள்ளது. கொலையாளி, முகமூடி ஏதும் போடாமல், மெத்தனமாகவே இந்த காரியத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. ஏடிஎம் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications